நாட்டின் கருத்துரிமை (நக்கீரன் கோபால்) கைது செய்யப்பட்டுள்ளது: சுப.வீரபாண்டியன்

சென்னை:

பிரபல வார இதழ் ஆசிரியரான நக்கீரன் கோபால் இன்று காலை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இது செய்தியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், ஊடகத்துறையினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சுப.வீரபாண்டியன்

இந்த நிலையில், திமுகவை சேர்ந்தவரும் பிரபல எழுத்தாளமான  சுப.வீரபாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். தமிழக அரசு நக்கீரனை கோபாலை கைது செய்யவில்லை, நாட்டின் கருத்துரிமையை கைது செய்துள்ளனர் என்று காட்டமாக கூறி உள்ளார்.

சமீபகாலமாக நக்கீரன் இதழில்  பேராசிரியை விவகாரம் குறித்து “தொடர்” ஒன்றை வெளியிட்டு வரும் நக்கீரன் பத்திரிகை ஆசிரியரை, சர்வாதிகார – பாசிச மனப்பான்மையுடன் கைது செய்திருப்பது, கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கு பாசிச பாஜக அரசும் – பொம்மை அதிமுக அரசும் விடுத்திருக்கும் பகிரங்க அச்சுறுத்தல் என்று கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மேலும்,  தங்கள் சித்தாந்தங்களுக்கு வேண்டாதவர்களை கைது செய்யத் தூண்டும் மத்திய பா.ஜ.க அரசும், தமிழக ஆளுநரும் கொல்லைப்புற வழியாக முகமூடி அணிந்துகொண்டு தங்கள் கட்டளைகளை நிறைவேற்ற எடுபிடி அடிமை அரசை பயன்படுத்துவது வெட்கக்கேடானது . உடனடியாக நக்கீரன் கோபால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும்,  கைது செய்யப்பட்டிருப்பது  நக்கீரன்கோபால் இல்லை, நாட்டின் கருத்துரிமை. இது ஒரே ஒரு ஏட்டின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை இல்லை, எல்லா ஏடுகளுக்குமான சட்டத்தை மீறிய மிரட்டல்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: The right to comment (Nakheeran Gopal) has been arrested: Suba Veerapandian condemns, நாட்டின் கருத்துரிமை (நக்கீரன் கோபால்) கைது செய்யப்பட்டுள்ளது: சுப.வீரபாண்டியன்
-=-