சென்னை,

கைக்கடை கொள்ளை சம்பந்தமாக கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற தமிழக காவல் ஆய்வாளர் அங்கு கொள்ளையர்களால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பெரியபாண்டியன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன், இதுகுறித்த இணை ஆணையர் சந்தோஷ்குமார் தலைமையில் போலீஸ் படையினர்  ராஜஸ்தானுக்கு செல்ல உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை மேற்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் சந்தோஷ்குமார், மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆணையாளரை சுட்டுக் கொன்ற கொள்ளையர்கள் தமிழக போலீசாரிடமிருந்து தப்பி முடியாது.

அவர்களை பிடிக்க ராஜஸ்தான் மாநில போலீசாருடன் இணைந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி உள்ளார்.

தமிழக போலீசார் சம்பவம் நடந்த ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்திற்கு பிற்பகல் செல்கின்றனர்,

சென்னையில் இருந்து விமானம் மூலம் ராஜஸ்தான் செல்லும் அவர்கள்,  ஜோத்பூரில் இருந்து பாலி மாவட்டத்திற்கு சாலை மார்க்கமாக செல்கின்றனர். இதற்கு சுமார்  5 மணி நேரம் ஆகும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு ராம்புரா சென்ற தமிழக போலீசார் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் திரும்பியது குறிப்பிடத்தக்கது.