பெங்களூரு:
ர்நாடக மாநிலம்  கோலார் பகுதியில் அமைந்துள்ள தங்கச்சுரங்கத்திற்குள் இறங்கி தங்கம் திருட முயன்ற கும்பல் சுவாசிக்க முடியாமல் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. சுரங்கத்திற்குள் இறங்கிய 3 பேர் பரிதாபமாக உயரிந்துள்ளனர்.
நாடுகளிலேயே மிகவும் ஆழ தங்கச் சுரங்கம் கோலார் தங்க வயல்.  ஆங்கிலேயர் காலத்திலேயே கண்டறியப்பட்டு தங்கம் தோண்டி எடுக்கப்பட்டு வந்தது. உலகிலேயே டோக்கியோவிற்கு அடுத்து இரண்டாவதாக மின்சாரம் பெற்ற நகரம் கோலார். 1902 இல் காவிரி நீரை பயன்படுத்தி நீர்மின் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியாவிலேயே முதன்முதலாக மின்சாரத்தை பயன்படுத்திய நகரமாக கோலார் புகழடைந்தது. இதன் தங்கச்சுரங்கத்திற்குள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தேவையான ஆக்சிஜன் பற்றாக்குறையும் போக்கப்பட்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரும் கூட இங்கிலாந்து ஜான் டெய்லர் கம்பெனியே 1956 வரை கோலாரில் தங்கம் தோண்டி எடுத்து வந்தது. 1963 இல் இருந்தே கோலார் தங்கவயல் பூரணமாக இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
30 000 தொழிலாளிகளின் ஒரே வேலைவாய்ப்பையும், 300 000 மக்களின் வாழ்வாதாரத்தையும் தாங்கிக்கொண்டிருந்த கோலார் தங்க சுரங்கத்தை,தொழிலாளர்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி 2001 இல் நீதிமன்ற உத்தரவுடன்  இந்திய அரசு மூடியது.
அயல்நாட்டாரால் பேணப்பட்டு 800 டன் தங்கத்தை உலகுக்கு தந்த உலகின் ஆழமான தங்கச்சுரங்கங்களுள் ஒன்று, அசட்டுத்தனமான போக்கினாலும், அதிகாரிகளின் ஊழலாலும் இன்று தற்போது பாழடைந்து போய் நிற்கிறது.
ஆனால், இந்த தங்கச்சுரங்கத்திற்குள் சென்றால் தங்கம் கிடைக்கும் என்ற ஆசையில் திருட்டுக் கும்பல் உள்ளே புகுந்துள்ளது.   சுமார் 1000அடி ஆழம் உள்ளே இறங்கிய அந்த கும்பங்கள் அங்கு தாங்கள் சுவாசிக்க போதிய அளவு   ஆக்சிஜன் கிடைக்காமல் அங்கேயே மயங்கி விழுந்து  உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறந்த காவல்துறையினர், மீட்பு படை உதவியுடன் அவர்களின் உடல்களை மீட்டுள்ளனர். நள்ளிரவில் 2 பேர் மீட்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவர் உடல் மீட்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இறந்தவர்கள் கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.