Random image

நடுரோட்டில் ஜாக்கெட்டை கழற்றிய ‘கொள்ளை’ சகோதரிகள்: காவலர்களிடம் இருந்து தப்பிக்க நூதன முயற்சி

மும்பை:

காராஷ்டிராவின் பல பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சகோதரிகள், காவலர்களிடம் இருந்து   தப்பிக்க, தங்களது மேலாடையை அவிழ்த்து ரகளை செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜூகு, சாந்தாகுரூஸ், வன்ராய், கார், காட்கோபர் போன்ற பகுதிகளில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இதற்கிடையில் மிகுந்த பாதுகாப்பு மிக்க மும்பை  போரிவிலி கஸ்தூரிபா மார்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இவர்கள் கொள்ளையடித்தது, அங்குள்ள சிசிடிவியின் உதவியால் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த காமிரா பதிவில், கொள்ளை சகோதரிகள் இருவரும், அடுக்குமாடி குடியிருப்புக்கு வீட்டுக்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் போல அந்த குடியிருப்புக்குள் சென்று  வீட்டை பூட்டை உடைத்து, கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட வந்த சகோதரிகள்

இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சகோதரிகளை தேடி வந்தனர். இந்த நிலையில், அவர்களின் புகைப்படங்களையும் பல்வேறு காவல்நிலையங்களுக்கு அனுப்பி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மும்பை  மலாடு டைமண்ட் மார்க்கெட் பகுதியில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிந்தபோது, அங்கு  சுற்றித் திரிந்த 2 பெண்கள் மீது சந்தேகம் கொண்டு கண் காணித்தனர். காவல்நிலையத்தில் உள்ள கொள்ளைக்காரிகளின் புகைப்படத்தை வைத்து பார்த்தபோது, அந்த இருவரும கொள்ளைகக்காரிகள் என்பது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து அந்த இரு பெண்களையும் காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்தனர். இதையறிந்த இரு பெண்களும், தங்களது ஜாக்கெட்டை கழற்றி அங்குள்ள பொதுமக்களிடம், காவலர்கள் தங்களை மானபங்கம் செய்வதாக கூக்குரலிட்டனர். சம்பவம் நடந்த இடம் பகுதி மார்க்கெட் பகுதி என்பவர் பொதுமக்கள் கூடினர். காவல்துறையினர் அவர்களை கைது செய்ய முடியாமல் விழி பிதுங்கினர். அதற்குள்  சம்பவ இடத்துக்கு பெண் காவல்துறையினர் வந்து விட்டதால், அவர்களை அந்த இரு பெண்களையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் அவர்களது பெயர் சரிதா, சுஜாதா என்பதும், இருவரும் சகோதரிகள் என்பதும் தெரிய வந்ததுள்ளது. தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிக்கொண்டி ருக்கிறார்கள்.

காவலர்களிடம் இருந்து தப்பிக்க தங்களது மேலாடைகளை களைந்த  அந்த பெண்களின் செயல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.