நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த டிவைன் ஜான்சன் எனும் ‘தி ராக்’…..!

நடிகர் டிவைன் ஜான்சன் எனும் ‘தி ராக்’ தன் நீண்ட நாள் காதலியான லாரென் ஹேஷியனை ரகசிய திருமணம் செய்துள்ளார் .

2001-ஆம் ஆண்டு வெளியான ‘தி மம்மி ரிட்டன்ஸ்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்,

டிவைன் ஜான்சன் தனது நீண்ட நாள் காதலியான லாரென் ஹேஷியனை ஞாயிறு அன்று மியாமியில் மணந்துகொண்டார். இவர்களது திருமணம் மியாமி கடற்கரையில் பெரிய ஆரவாரம் இன்றி ரகசியமாய் நடைபெற்றது.

12 வருடங்களாக காதலித்து வரும் இந்த ஜோடிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் வெள்ளை நிற ஆடையில் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தி ராக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த தம்பதியருக்கு பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.