பசுவதை என வதந்தி – முஸ்லீம் அடித்து கொலை

மீரட்: பசுவை படுகொலை செய்ததாக வதந்தி பரவிய நிலையில் 45வயதான முஸ்லீம் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். ஹாபூர் அருகே பஜ்ஹேரா குர்த் கிராமத்தில் காசிம் என்ற முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டார். செவ்வாய் கிழமை அடையாளம் தெரியாத ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ” வயதான ஒருவர் படுகாயங்களுடன் வயலின் அடித்து கொண்டு வரப்பட்டார். அவரை சுற்றி பலர் கூடியிருந்தனர். அவர்களில் ஒருவர் இவனுக்கு தண்ணீர் தேவையில்லை” என்று கூறியது பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் அந்த வீடியோவில் “பசுவை கொலை செய்ததற்கான தண்டனை இது “ என்று காசிம் படுகொலைக்கு காரணம் கூறப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் 25 பேரை கைதுசெய்தனர்.
gang killing
45 வயதான காசிம் மற்றும் அவரது நண்பர் சமைதின் தனது வயலில் ஒரு கன்று மற்றும் பசுவை தாக்கியதாக வதந்தி பரவின. இதனை தொடர்ந்து அங்கு லத்தி்யுடன் சென்ற ஒரு கும்பல் காசிம் மற்றும் அவரது நண்பரை தாக்கினர். இதில் படுகாயமடந்த காசிம் சிலமணி நேரங்களில் இறந்தார். அவரது நண்பர் சமைதின் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் வேகமாக பரவ தொடங்கிய நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத 25பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் இருவர் கொலை செய்யப்பட்டதாக அடையாளம் காணப்பட்டனர். இதேபோன்ற சம்பவம் சில நாட்களுக்கு முன்பு ஜார்கண்ட் பகுதியில் நடைபெற்றது. பசுவை திருடியதாக கூறி இரண்டு முஸ்லீம்கள் அடித்து கொலை செய்யப்பட்டனர்.