சபரிமலை போராட்டமே பாஜகவின் திட்டம்: கேரள பாஜ தலைவர் சர்ச்சை பேச்சு

--

பம்பா:

சபரிமலை விவகாரம், கேரளாவில் மாநில அரசுக்கு எதிரான அரசியலுக்கு பாஜகவுக்கு கிடைத்துள்ள  “தங்கமான வாய்ப்பு”, இந்த போராட்டமே பாஜகவின் திட்டம் என்றும் கேரள பாஜ தலைவர் பேசியுள்ளார். அவர் பேசிய ஆடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

பரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் இளம்பெண்கள் நுழைந்தால், கோவில்  நடையை மூடிவிடுவோம் என்று  அய்யப்பன் கோவில் மேல்சாந்தி  எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மாநில பாஜக தலைவர் பேசிய ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அந்த அடியோவில், மாநில பாஜ தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை, சபரிமலை விவகாரம் கேரளாவில் பாஜகவுக்கு இது ஒரு ‘தங்கமான வாய்ப்பு’ என்று கூறி உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சபரிமலை விவகாரத்தை பெரிதுபடுத்தி கேரள மாநிலத்தில் பாஜக அரசியல் செய்து வருகிறது. மாநிலம் முழுவதும் போராட்டங்களை தூண்டி, கோவிலுக்கு வரும் பெண்களை மிரட்டி  வருகிறது.  தற்போதும் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கோழிக்கோட்டில் நடைபெற்ற சபரிமலை யுவ மோர்ச்சா கூட்டத்தில் பேசிய மாநில பாஜ தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு குறித்த ஆடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.

சபரிமலை விவகாரம் மாநிலத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு ஒரு தங்கமான வாய்ப்பு என்று ஸ்ரீதரன்பிள்ளை  பேசி உள்ளார். இதைத்தொடர்ந்தே சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் வந்தால் நடை அடைக்கப்படும் என்று கோவில் மேல்சாந்தி எச்சரிக்கை விடுத்துள்ள தாக கூறப்படுகிறது.

அதில், சபரிமலை தந்திரிகள் மாநில பாஜக தலைவர்களின் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ள னர் என்றும்,  பெண்கள் சபரிமலைக்குள் நுழைந்தபோது, தந்திரி  என்னை அழைத்தார். அ;ப்போது அவரிடம் நான் ஒரு வார்த்தை தற்செயலாக பேசினேன் ஆனால், அது நடந்து விட்டது என்று கூறினார். அந்த நேரத்தில் நான் சிலருடன் தொடர்பில் இருந்ததாகவும்,  கோவிலின் சன்னிதானம் கதவுகளை மூடுவது குறித்து தந்திரி சற்று கவலை அடைந்தார் என்றும், இதன் காரணமாக தன்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என நினைத்தாகவும் கூறி உள்ளார்.

சபரிமலை எதிர்ப்பு மட்டுமே தற்போது பாஜகவின் நிகழ்ச்சி (agenda)  என்று கூறிய ஸ்ரீதரன் பிள்ளை, இந்த போராட்டத்தை கட்சியின் பொதுச்செயலாளர்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர் என்றும், ஐப்பசி மாத பூஜையின்போது, கோவில் சன்னிதானத்திற்குள் 2 பெண்களை ஐ.ஜி.ஸ்ரீஜித் அழைத்துச்சென்றபோது,  அவர்களை உள்ளே வர விடாமல் யுவ மோர்ச்சா ஆர்வலர்கள் அவர்களை தடுத்துவிட்டதாகவும், அதுபோல மாநில அரசும் வீழ்ச்சியுற வேண்டும்… அதை நாம் காணவேண்டும்  என்று கூறி உள்ளார்.

மேலும், “நான் தனியாக இல்லை என்று பேசிய ஸ்ரீதரன்பிள்ளை,  நீதிமன்றஅவமதிப்பு குற்றச்சாட்டுகள் வரும்போது நாம் முதலில் இருக்க வேண்டும். நம்முடன் பல்லாயிரக்கணக்கான மக்கள்  இருக்க வேண்டும் என்று உறுதி தெரிவித்து உள்ளார்.

அவரது பேச்சு தற்போது வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீதரன் பிள்ளை, தான் ஒரு அரசியல் கட்சி  தலைவராகவும் சட்ட ஆலோசகராகவும் சட்டப்பூர்வ கருத்தை வழங்கியதாகக் கூறி உள்ளார். ஆனால், “தங்கமான  வாய்ப்பை” குறித்து பதில் சொல்ல மறுத்துவிட்டார்.

இதுகுறித்து, கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தனது டிவிட்டர் பக்கத்தில், “சரிமலை விவகாரத்தில் பா.ஜ.க. நிலைப்பாடு, ஒருஐ  கொடூரமான அரசியல் என்றும், இது ஒரு பரிதாபமான வழி என்றும் விமர்சித்துள்ளார். சபரிமலை விவகாரத்தில் சிக்கலை உருவாக்க மாநிலத்தில் உள்ள பி.ஜே.பி தலைவர்கள்  முயற்சி செய்துள்ளதற்கான சான்றுகள் வெளிவந்துள்ளன. இதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில்,  தீபாவளி மற்றும் ஸ்ரீசித்ர அட்ட திருநாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று  மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. இதன் காரணமாக மீண்டும் பரபரப்பு தொற்றி உள்ள நிலையில், “சபரிமலை கோவிலில் ஐதீகத்தை மீறி பெண்களை சாமி தரிசனத்திற்கு அனுமதித்தால் கோவில் நடையை அடைத்து சுத்திகலச பூஜை நடத்தப்படும்” என்றும்,  கோவிலை பூட்டி சாவியை ராஜ குடும்பத்திடம் ஒப்படைப்போம் என்று மேல்சாந்தி மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.