சென்னை:  சென்னை ஜார்ஜ் கோட்டையில் காவி கொடி பறக்கும் என தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.முருகன்  தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்தஆண்டு (2021) முற்பகுதியில், சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு கட்சியைச் சேர்ந்த அதிருப்தி தலைவர்களுக்கு ஆசை வார்த்தை கூறி, பாரதியஜனதா கட்சிக்கு அழைத்து வருவதில்,  தீவிரமாகி இறங்கியுள்ள தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், அதிமுக, திமுக உள்பட கட்சிகளில் இருந்து சில தலைவர்களை இழுத்து, அவர்களுக்கு பதவி வழங்கி, அரசியல் ஆட்டத்தை தொடங்கி உள்ளது. இதனால் காரணமாக தமிழக அரசியலில் கால் பதிக்க தீவிரமாக பணியாற்றி வருகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், தமிழகத்தில் பாஜக தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறினார்.

மேலும்,  சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஜார்ஜ் கோட்டையில் காவிக்கொடி பறக்கும் எனவும், தமிழக சட்டமன்றத்தில் பாரதியஜனதா கட்சி கால் பதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய அரசின் திட்டங்களை அதிக அளவில் பயன்படுத்தும் மாநிலம் தமிழ்நாடுதான் என்று கூறியவர்,  ரஜினி காந்த் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டாலோ அல்லது ஆன்மீக அரசியல் தொடங்கினாலோ நாங்கள் அதை வரவேற்போம்,  ரஜினி கட்சி ஆரம்பித்த பின்னர் அவரிடம் கூட்டணி குறித்து பேசுவோம் என்றும் தெரிவித்தார்.