”25 வயதிற்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுதலாம்” – உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு

--

25 வயதுக்கு மேற்பட்டோரும் நீட் தேர்வு எழுதலாம் என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இடைக்காலத்திற்கு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு இறுதி தீர்ப்பை பொறுத்து மாறுபடலாம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

neet

மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு எழுதும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு வயது வரம்பு குறைந்தபட்சம் 17 என்றும், அதிகபட்சமாக 25 வரையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு அதிகபட்சமாக 30 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களி வயது வரம்புகளை நீட்டிக்க கோரி கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மாணவர்களால் பொதுநலன் மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் 2019ம் ஆண்டு நடைபெறும் நீட் தேர்வில் வயது வரம்பு எதுவும் கிடையாது.

பொதுப்பிரிவில் 25 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களும் நீட் தேர்வு எழுதலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதுமட்டுமின்றி, இது இடைக்கால உத்தரவு தான் என்றும், வழக்கில் இறுதி தீர்ப்பு மாறும் பட்சத்தில் இந்த உத்தவு செல்லாது. அதனால் வயது வரம்பு தளர்வு என்பது இறுதி தீர்ப்பை பொறுத்தது. அதை கருத்தில் கொண்டு நீட் தேர்வை நடத்தும் அமைப்புகள் செயல்பட வேண்டுமென நீதிபதி கூறினர்.

நீட் வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்பட்சத்தில் தற்போது வயது வரம்பு தளர்வு காரணமாக விண்ணப்பித்தவர்கள் தேர்வை எதிர்கொள்வதில் சிக்க நீடிக்கும். எனவே, உச்சநீதிமன்றம் காலம் தாழ்த்தாமல் விரைவில் உறுதியான ஒரு தீர்ப்பை கொண்டு வர வேண்டுமென்பதே மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.