மாயாவதி சிலை, யானை சிலைக்கு ஆன செலவை அரசுக்கு திருப்பித் தரலாம்: மாயாவதிக்கு உச்சநீதிமன்றம் யோசனை

புதுடெல்லி:

மாயாவதி சிலை மற்றும் யானை சின்னத்தை சிலையாக வைக்க அரசு பணத்திலிருந்து செலவழித்த தொகையை, மாயாவதியே திரும்பச் செலுத்தலாம் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், உத்திரப்பிரதேசம் முழுவதும் அரசு செலவிலேயே மாயாவதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானையும் சிலையாக வைக்கப்பட்டுள்ளது.

தங்கள் சுய விளம்பரத்துக்கு அரசு பணத்தை செலவிட்டது தவறு என்று குறிப்பிட்டிருந்தார்.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான் உச்ச நீதிமன்ற அமர்டு, “அரசு பணத்தை எடுத்து தனக்கும், கட்சி சின்னமான யானைக்கும் சிலை வைத்துள்ளார். எனவே, இதற்காக அரசு செலவழித்த தொகையை மாயாவதியே அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்பதே எங்கள் கருத்து” என்றனர்.

மேலும் இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணையை ஏப்ரல் 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published.