14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 15ம் தேதி தொடங்கி 28ம் தேதி போட்டி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 19ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் மோத உள்ளன.

Asia-Cup-2018

ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி 1984ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த 13 போட்டிகளில் இந்தியா 6 முறையும், இலங்கை 5 முறையும், பாக்கிஸ்தான் 2 முறையும் வெற்றிப்பெற்றுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள இந்த ஆசிய போட்டிகளில் ஆறு அணிகள் பங்கு பெற்று விளையாட உள்ளன. மொத்தம் 13 ஆட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டிகளில் இந்தியா, பாக்கிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதி சுற்றில் வெற்றிப்பெறும் அணிகள் பங்கேற்கின்றன.

தகுதி சுற்று போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஏமன், நேபாளம், மலேசியா, ஹாங்காங் உள்ளிட்ட அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிப்பெறும் அணி ஆசிய கோப்பை போட்டியில் ஏ பிரிவில் இடம்பெறும். இதனை தவிர்த்து ஏற்கெனவே இந்தியா, பாக்கிஸ்தான் அணிகள் ஏ பிரிவில் உள்ளன.

இதேபோல் பி பிரிவில் களம் காண உள்ள அணிகளாக இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளன. செப்டம்பர் 15ம் தேதி நடக்க உள்ள போட்டியில் இலங்கை அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

லீக் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெறும். அந்த சுற்றில் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் இறுதி போட்டியில் பங்கேற்கும்.

ind-pak-1

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான முழு அட்டவணை விவரம்:

செப்-15- இலங்கை-வங்கதேசம்(துபாய்)

செப்.16- பாக்கிஸ்தான்-தகுதிச்சுற்று அணி(துபாய்)

செப்.17- இலங்கை-ஆப்கானிஸ்தான்(அபுதாபி)

செப்.18- இந்தியா-தகுதிச்சுற்று அணி(துபாய்)

செப்.19- இந்தியா-பாக்கிஸ்தான்(துபாய்)

செப்.20- வங்கதேசம்-ஆப்கானிஸ்தான்(அபுதாபி)

சூப்பர் ஃபோர் சுற்று:

செப்.23- குரூப்ஏ வின்னர்- குரூப் ஏ ரன்னர் (துபாய்)

செப்.23- குரூப் பி வின்னர்- குரூப் பி ரன்னர் (அபுதாபி)

செப்.25- குரூப் ஏ வின்னர்- குரூப் பி வின்னர் (துபாய்)

செப். 26- குரூப் ஏ ரன்னர்- குரூப் பி ரன்னர் (அபுதாபி)

இறுதிப்போட்டி:

செப்.28- சூப்பர் ஃபோர் சுற்றில் வெற்றிப்பெறும் இரு அணிகள் (துபாய்)

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-