ஆசிய கோப்பை கிரிக்கெட் 2018: போட்டிகள் நடைபெறும் முழு அட்டவனை

துபாய்:

ஆசிய கோப்பை கிரிக்கெட்2018  போட்டிகள் வரும் 15ந்தேதி  தொடங்குகிறது.  துபாய் மற்றும் அபுதாபி போன்ற நாடுகளில் ஆசியகோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான முழு அட்டவனை தற்போது வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டு நடைபெற உள்ள  2018 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடப்படும் அனைத்துப் போட்டிகளுக்கும் சர்வதேச அந்தஸ்து தரப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

தற்போது ஆட உள்ள அணிகளில், ஹாங்காங் அணி மட்டும் தான், இன்னும் ஒருநாள் போட்டிக்கான அந்தஸ்து பெறாத நிலையில் இருக்கிறது. ஐசிசி-யின் தற்போதைய அறிவிப்பின் மூலம் ஹாங்காங் விளையாடும் போட்டிகளும் சர்வதேச அந்தஸ்துடைய போட்டிகளாகவே கருதப்படும் என்று ஐசிசி அறிவித்து உள்ளது.

ஹாங காங் அணியைத் தவிர்த்து ஆசிய கோப்பை தொடரில், இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் பங்கேற்க உள்ளன. ஆசியக்கோப்பை தொடருக்கான அட்டவனையை சர்வதேச கிரிக்கெட் கவுண்சில் (ஐசிசி.,) வெளியிட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் 14 வது ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர்15 முதல் 26 வரை நடக்க வுள்ளது. இதில் ஐசிசி.,யின் முழுநேர உறுப்பினர் என்ற அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள்  நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

இது தவிர,  தகுதிச்சுற்றுக்கான போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங், மலேசியா, நேபாளம், ஓமன், சிங்கப்பூர் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இத்தொடருக்கான அட்டவணையை ஐசிசி., இன்று வெளியிட்டது.

அனைத்து ஆட்டங்களும் இந்திய நேரப்படி மாலை 7 மணி அளவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆசிய கோப்பை முழு அட்டவனை: 

லீக் சுற்றுகள்: 

செப்டம்பர் 15 : வங்கதேசம் – இலங்கை (துபாய்)
செப்டம்பர் 16 : பாகிஸ்தான் – தகுதிச்சுற்று தேர்வாளர் (துபாய்)
செப்டம்பர் 17 : இலங்கை ஆப்கானிஸ்தான் (அபு தாபி)
செப்டம்பர் 18 : இந்தியா – தகுதிச்சுற்று தேர்வாளர் (துபாய்)
செப்டம்பர் 19 : இந்தியா – பாகிஸ்தான் (துபாய்)
செப்டம்பர் 20 : வங்கதேசம் – ஆப்கானிஸ்தான் (அபு தாபி)

சூப்பர் ஃபோர் சுற்று: 

செப்டம்பர் 21 : குரூப் ஏ வெற்றியாளர் – குரூப் பி இரண்டாவது இடம் (துபாய்)
செப்டம்பர் 21 : குரூப் பி வெற்றியாளர் – குரூப் ஏ இரண்டாவது இடம் (அபு தாபி)
செப்டம்பர் 23 : குரூப் ஏ வெற்றியாளர் – குரூப் ஏ இரண்டாவது இடம் (துபாய்)
செப்டம்பர் 23: குரூப் பி வெற்றியாளர் – குரூப் பி வெற்றியாளர் (அபு தாபி)
செப்டம்பர் 25: குரூப் ஏ வெற்றியாளர் – குரூப் பி வெற்றியாளர் (துபாய்)
செப்டம்பர் 26: குரூப் ஏ இரண்டாவது இடம் – குரூப் பி இரண்டாவது இடம் (அபு தாபி)

இறுதி ஆட்டம்:

செப்டம்பர் 28 : ஃபைனல் (துபாய்)

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: The schedule for the 2018 men's Asia Cup has been announced!, ஆசிய கோப்பை கிரிக்கெட் 2018: போட்டிகள் நடைபெறும் முழு அட்டவனை
-=-