பாக்தாத்

ராக் அழகி சாரா இடான் இஸ்ரேல் அழகியுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டதால் ஏற்பட்ட பரபரப்பில் ஈராக் அழகியின் குடும்பம் நாட்டை விட்டு வெளியேறி உள்ளது.

ஈரான் மற்றும் ஈராக் நாடுகளிடையே பாலஸ்தீனிய பிரச்னையால் கடும் அரசியல் மோதல் ஏற்பட்டு வருகிறது.   அரசியலில் தொடங்கிய இந்த பிரச்னை அழகிகளை மட்டும் அல்ல அவர்களின் குடும்பத்துக்கும் பிரச்னையை உண்டாக்கி உள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் பிரபஞ்ச அழகி (Miss Universe) போட்டி நிகழ்ந்தது.    அதில் கலந்துக் கொண்ட அழகிகளில் ஈரான் அழகி அடார் கேண்டல்ஸ்மேன் மற்றும் ஈராக் அழகி சாரா இடான் ஆகியோரும் அடங்குவர்.   இருவரும் போட்டி நடக்கும் போது நல்ல தோழியாகி உள்ளனர்.    இருவரும் செல்ஃபி புகைப்படம் எடுத்து அதை தங்கள் இன்ச்டாகிராம் பக்கத்தில் பதிந்தனர்.

அதற்கு ஈராக் நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.   ஈராக் அழகிக்கும் அவர் குடும்பத்தினருக்கும்  கொலை மிரட்டல் வந்ததை அடுத்து சாராவின் குடும்பம் ஈராக்கை விட்டு வெளியேறியது.    இது குறித்து இஸ்ரேல் அழகி கேண்டல்ஸ்மேன், “இது உண்மையான தகவல் தான்.    இப்போதும் அவருடன் நான் தொடர்பில் இருக்கிறேன்.   பயப்படும்படி ஒன்றும் கிடையாது.   பிரச்னை காரணாமாக நாட்டை விட்டு வெளியேறிய சாரா விரைவில் பிரச்னை அடங்கிய பின் நாட்டுக்கு திரும்பச் செல்வார்” எனக் கூறி உள்ளார்.

சாரா இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், “இப்படிப்பட்ட பிரச்னைகளை எதிர்கொள்ளும் முதல்பெண் நான் இல்லை.   லட்சக்கணிக்கில் உள்ள ஈராக் பெண்கள் அனைவருமே இப்படி ஒரு பயத்தில் தான் வாழ்ந்து வருகின்றனர்” எனப் பதிந்துள்ளார்.