மேரி காலின்ஸ்

குழந்தைகள் மீதான வன்கொடுமையை கண்காணிக்க அமைக்கப்பட்ட ஆணையத்துக்கு ஒத்துழைக்க  வாட்டிகன் நிர்வாகம் ஒத்துழைப்பதில்லை. குழந்தைகளை வன்புணர்வு செய்த பல பாதிரியார்களுக்கு கண்துப்பான தண்டனைகளே வழங்கப்பட்டுள்ளன” என்று அதிர்ச்சிகரமான குற்றத்தை சுமத்தி,  ஆணையத்தின் உறுப்பினர் பதவியை துறந்திருக்கிறார் மேரி காலின்ஸ் என்பவர்.

கத்தோலிக்க திருச்சபைகளில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது பாலியல் வன்முறைகள் நடக்கின்றன என்றும் அவற்றை தடுக்கவும் கண்காணிக்கவும் போதுமான நடவடிக்கைகள் இல்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆணையம் ஒன்றை உருவாக்கினார் வாட்டிகன் அதிபர் போப் பிரான்சிஸ்.

இந்த ஆணையத்தின் உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார் மேரி காலின்ஸ். இவர்   முன்பு, மதகுரு ஒருவரின் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர், “ஆணையத்தின் பணிகளுக்கு வாட்டிகன் நிர்வாகம் ஒத்துழைப்பதில்லை. குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த பல பாதிரியர்களுக்கு குறைந்த அளவிலான தண்டனைகளே வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் வெட்கட்கேடானது” என்று தெரிவித்து, தனது உறுப்பினர் பதவியைவிட்டு வலகியிருக்கிறார்.

இது உலக அளவில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது.