அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு: குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை:

யனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது காவல்துறை போட்ட குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்துள்ளது.

சென்னை அயனாவரத்தில் உள்ள பிரபலமான  அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்து வந்த  லிப்ட் ஆபரேட்டர்கள், காவலாளிகள் உள்பட 17 பேர் சுமார் 17வயதான மனம் நலம் குன்றிய பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளனர்.

இது தொடர்பான புகான் பேரில் 17 பேர் போக்சோ சட்டத்தின்படி கைது செய்யப்பட்டனர்.  அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இதை எதிர்த்து  குற்றம் சாட்டப்பட்டவர்களில் 6 பேரின் உறவினர்கள்  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.  இந்த மனுக்கள் மீதான விசாரணை நடை பெற்று வந்தபோது இதுகுறித்து விளக்கம் அளிக்க தமிழக உள்துறை செயலாளர், சென்னை காவல் ஆணையர், சிறைக் கண்காணிப்பா ளருக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது 16 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக  சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.