சாஸ்த்ரா பல்கலை ஆக்கிரமிப்பும் துணை போன அதிமுக திமுக கட்சிகளும்!: அறப்போர் இயக்கம் அதிரடி வீடியோ

தஞ்சை அருகே செயல்படுகிறது  சாஸ்த்ரா பல்கலைக்கழகம்.  கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசின் சிறைத்துறைக்குச் சொந்தமான 58.17 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை  ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளதாக இப்பல்கலை மீது புகார் எழுந்தது.

பல்வேறு சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு, “பல்கலை ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து சாஸ்திரா பல்கலைக்கழகம்,  ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அக்டோபர் 3ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் அந்த கட்டிடங்கள் காவல்துறை உதவியோடு இடிக்கப்படும் என்றும் எச்சரித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பினார்.

ஆனால் இன்னமும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

இந்த நிலையில் சாஸ்த்ரா ஆக்கிரமிப்பு குறித்து அறப்போர் இயக்கம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோ..

 

https://www.youtube.com/watch?v=mdkWtdKAmfM&feature=youtu.be