‘ஆதித்யா வர்மா’ படப்பிடிப்பு நிறைவு….!

பாலா இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில் ‘வர்மா’ என்ற பெயரில் ‘அர்ஜுன் ரெட்டி’. ரீமேக் செய்யப்பட்டது. ஆனால், இறுதிப் பிரதி திருப்தி அளிக்காததால் படம் கைவிடப்பட்டது.

தற்போது ‘அர்ஜுன் ரெட்டி’ படம், ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

துருவ் விக்ரம், பனிடா சாந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் தொடங்கப்பட்டாலும், இடைவெளி இல்லாமல் படுவேகமாக படப்பிடிப்பை நடத்தி வந்தனர்.

நேற்றுடன் (மே 14) இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Adithya Varma, Dhruv Vikram, Priya Anand, Sandeep Vanga, wrapped
-=-