நாளை முதல் 30ந்தேதி வரை மதியம் 2 மணி வரையே கடைகள் திறந்திருக்கும்… வணிகர்கள் சங்கத்தலைவர் வெள்ளையன் அறிவிப்பு

சென்னை:

நாளை முதல் 30ந்தேதி வரை மதியம் 2 மணி வரையே கடைகள் திறந்திருக்கும் என்று வணிகர்கள் சங்கத்தலைவர் வெள்ளையன் அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், மாநில தலைநகர் சென்னையில் தொற்று பரவல் கடுமையாக உள்ளது. இதன் காரணமாக, கடைகளை 15 நாட்கள் மூட தயாராக இருப்பதாக வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னையில் கடைகள் மூட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள தமிழக வணிகர்களின் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன், நாளை முதல்  மதியம் 2 மணி யுடன் கடைகளை அடைக்க இருப்பதாகவும், வரும் 30ந்தேதி வரை இந்த நிலை தொடரும் என்றும் தெரிவித்து உள்ளார்.

 தென்சென்னை,மத்திய சென்னை, வட சென்னையில் உள்ள பேரவை உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக  வெள்ளையன் தெரிவித்து உள்ளார்.