மதுவுக்கு எதிரான பாடல் என்றால் அரசுக்கு எதிரானதா? : கவிஞர் கபிலன் வைரமுத்து குமுறல்

து கலாச்சாரத்துக்கு  எதிராக தாங்கள் உருவாக்கி வரும் பாடலை, தமிழக அரசுக்கு கருதப்படுவதால் படப்பிடிப்பு நடத்த பல இடங்களில் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என்று கவிஞர் கபிலன் வைரமுத்து தனது குமுறலை வெளிப்படுத்தி உள்ளார்.

கபிலன் வைரமுத்து

மதுவினால் நிகழும் சீரழிவிற்கு எதிராக தமிழகத்தில்பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். பொதுமக்களே தன்னெழுச்சியாக டாஸ்மாக் மதுக்கடைகள் முன் போராடி பல கடைகளை மூடவைத்திருக்கிறார்கள்.

பாடல் ஒலிப்பதிவின்போது

இந்த அசாதாரண சூழலை மையமாகக் கொண்டு கவிஞர் வைரமுத்துவின் மகனும், கவிஞருமான கபிலன் வைரமுத்து ஒரு தனிப்பாடலை எழுதியிருக்கிறார்.  இந்தப் பாடலை பிரபல இயக்குநர் டி.ராஜேந்தர் பாடியிருக்கிறார். கஜினிகாந்த் திரைப்படத்திற்கு இசை அமைத்த பாலமுரளி பாலு இப்பாடலுக்கு இசை அமைத்திருக்கிறார். டிவோ (divo) நிறுவனத்தின் தளத்தில் இந்தப் பாடல் வெளியாகவிருக்கிறது.

 

பாடல் படப்பிடிப்பு

மதுக் கலாச்சாரத்திற்கு எதிரான இந்தத் தனிப்பாடலின் தலைப்பு, வெளியாகும் தேதி என்று பல்வேறு தகவல்களை கபிலன் குழு ஒரு காணொளியாக வெளியிடப்போவதாக அறிவிக்கப்பட்டது.

படத்தை காட்சிப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக சில இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது.

கபிலன் வைரமுத்து பதிவு

இந்த நிலையில் கபிலன் வைரமுத்து, “மதுவுக்கு எதிரான இந்த பாடலை, அரசுக்கு எதிராக கருதுவதால் படப்பிடிப்பு நடத்த பல இடங்களில் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை” என்று குமுறியிருக்கிறார்.

இது குறித்து தனது முகநூல் பதிவில், “மதுவுக்கு எதிரான பாடல் அரசுக்கு எதிரான பாடலாகக் கருதப்படுவதால் பல இடங்களில் ஒத்துழைப்பு குறைவாகத்தான் இருக்கிறது” என்று கபிலன் வைரமுத்து தெரிவித்திருக்கிறார்.