சென்னை:

கொளுத்தும் வெயிலில் மக்கள் அவதிப்படாமல் இருக்க தென்னக ரயில்வே விரைவில் சென்னை செங்கல்பட்டு இடையே ஏசி மின்சார ரயிலை இயக்க உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே டில்லி மும்பை போன்ற இடங்களில் புறநகர் சேவைக்கு ஏசி ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையிலும் ஏசி ரயில் சேவையை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வந்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டுதான் உள்ளது. இந்த நிலையில், வெயில் காலத்தில் மக்கள் சற்று இளைப்பாறும் வகையில் 12 பெட்டிகள் கொண்ட ஏசி ரயிலை இயக்க முன்வந்துள்ளது.  முதல்கட்டமாக சென்னை கடற்கரை முதல் செங்கல் பட்டு வரை இந்த ரயில் இயக்கப்பட இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஆனால், இதற்கான கட்டணம் சற்று கூடுதலாக இருக்கும் என கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக இன்னும் கட்டணம் குறித்தம், ரயில் இயக்கப்படும் தேதி குறித்தும் அறிவிக்கப்டவில்லை.