டில்லி:

ட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினரால் விசாரிக்கப்பட்டு வரும், பிரியங்கா காந்தியின் கணவர்,  ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல டெல்லி நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா மீது நில மோசடி வழக்கு, சட்டவிரோத பணப் பரிவர்த்தன போன்ற வழக்குகள் உள்ளது.

வதேரா, குர்கான் மற்றும் பிகானிரில் நிலம் வாங்கியதில் நடந்த மோசடி நடைபெற்றதாகவும்,  லண்டனில் 19 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை சட்ட விரோதமாக வாங்கியதிலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையினர், அவர்மீத  சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்களில் அவர் ஏற்கனவே முன்ஜாமின் பெற்றுள்ள நிலையில், வியாபார சம்பந்தமாக வெளிநாடு செல்ல அனுமதி கோரியிருந்தார்.

அதன்படி வரும் 20ந்தேதி வெளிநாடு செல்ல இருப்பதாகவும், அதற்கு அனுமதி வழங்கும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை நேற்று  நடைபெற்றது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வதேரா இந்தியாவை விட்டு செல்ல கூடாது என்ற நிபந்தனையுடன் அவருக்கு முன்ஜாமீன் அளிக்கப்பட்டிருந்தது என்பதைச் சுட்டிக்காட்டி அவருக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று வாதிட்டார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், செப்டம்பர் 21-ம் தேதியில் இருந்து அக்டோபர் 8-ம் தேதிவரை ராபர்ட் வதேரா ஸ்பெயின் நாட்டுக்கு செல்ல அனுமதியளித்து உத்தரவிட்டார்.