கூச்சல் குழப்பம் -அமளி: இலங்கை நாடாளுமன்றம் நாளைக்கு ஒத்தி வைப்பு

கொழும்பு:

லங்கையில் நடைபெற்று வந்த உச்சக்கட்ட அரசியல் குழப்பம் காரணமாக இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஜனவரியில் தேர்தல் நடைபெறும் என்றும் அதிபர் சிறிசேனா அறிவித்தார்.

(ஸ்ரீலங்கா பாராளுமன்றம் – பைல் படம்)

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சிறிசேனா உத்தரவு செல்லாது என்றும், உடனே நாடாளுமன்றத்தை கூட்டவேண்டும் என்றும் இலங்கை உச்சநீதி மன்றம் அறிவித்தது.

அதன்படி இன்று இலங்கை நாடாளுமன்றம் கூடியது. ரணில் கட்சி எம்பிக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து அவைக்கு வந்திருந்தனர்.

அதைத்தொடர்ந்து, சிறிசேனா நியமனம் செய்த பிரதமர்  ராஜபக்சேவுக்கு எதிராக  ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி சார்பில் நம்பிக்கை யில்லா தீர்மானம் இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதில் ராஜபக்சே தோல்வியை தழுவினார்.

இதன் காரணமாக  அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் தொடர்ந்தநிலையில், பிரதமர் ராஜபக்சே அவையில் இருந்து  வெளிநடப்பு செய்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய அவைத்தலைவர் கரு. ஜெயசூர்யா  ராஜபக்சேவுக்கு நாடாளுமன்றத் தில் பெரும்பான்மை இல்லை  என்று  இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார். அதைத்தொடர்ந்து அமளி காரணமாக  நாடாளுமன்றம்  நாள் முழுவதும் ஒத்திவைப்பதாகவும், நாளை காலை 10 மணிக்கு மீண்டும் அவை கூடும் என்றும் அறிவித்தார்.