கொழும்பு:

ஈஸ்டர் திருநாளில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தியதாக, தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பை இலங்கை அரசு தடை செய்துள்ளது.

இலங்கையில் நடந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்தில் மனித வெடிகுண்டாக செயல்பட்டவர்கள் என ஐஎஸ் அமைப்பு வெளியிட்ட படம்.

இலங்கையில் ஈஸ்டர் அன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 253 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தவ்ஹித் ஜமாத் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமும் மனித வெடிகுண்டாக செயல்பட்டுள்ள இறந்துள்ளார்.
இந்நிலையில், தேசிய தவ்ஹித் ஜமாத் மற்றும் ஜமாத்தி மில்லது இப்ராஹீம் இயக்கத்தையும் இலங்கை அதிபர் மைத்ரிபால சிரிசேனா தடை செய்தார்.

இந்த இரு இயக்கங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் சிரிசேனா தெரிவித்துள்ளார்.

புதன் கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய அவசர நிலை பிரகடனத்துக்கு ஒப்புதல் பெற்ற பின் இத்தகைய அறிவிப்பை அதிபர் சிரிசேனா வெளியிட்டார்.

இந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆனால், இலங்கை அரசோ உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான தேசிய தவ்ஹித் ஜமாத்தை குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.