பெங்களூரு,

முத்திரைத்தாள் மோசடி மன்னன் தெல்கி பெங்களூரு மருத்துவமனையில் மரணம் அடைந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் சிகிச்சை பெற்று வந்த தெல்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாட்டையே உலுக்கிய பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிலான முத்திரைத்தாள் மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டவர் அப்துல் கரீம் தெல்கி.

இவருக்கு 30 ஆண்டு  தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து புனேயில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவரது உடல்நிலையை காரணம் காட்டி, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இதே சிறையில்தான் சொத்துகுவிப்பு வழக்கில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவும் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விஐபிக்கள் சொகுசாக இருப்பதாக சிறைத்துறை டிஐஜி ரூபா வெளியிட்ட வீடியோவில் இவரும் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தெல்கி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.