நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் பட்டியல் தயாரிப்பு வழிமுறைகள் வெளியீடு….

சென்னை:

மிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்கான வழிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி,  இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியல் அடிப்படையில் வாக்காளர் பட்டியலை தயாரிக்க மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தேர்தல் ஆணையர்  பழனிசாமி கடந்த மாதம் ஆலோசனை நடத்தினார். அப்போது,  வாக்குச்சாவடிகளைக் கண்டறிதல்,ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலை சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்குவது, உரிய காலத்திற்குள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்து   ஆலோசனை நடத்தினார். இதன் காரணமாக ஏப்ரல் இறுதியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் எனும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வாக்காளர் பட்டியலை  இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியல் அடிப்படையில் வாக்காளர் பட்டியலை தயாரிக்க மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

இந்த வாக்காளர் பட்டியல் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் 20ம் தேதி வெளியிட வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.