மகாராஷ்டிராவில் விரைவில் சலூன், உடற்பயிற்சி கூடங்களை திறக்க முடிவு…

மும்பை:

நாட்டிலேயே கொரோனா பரவல் தீவிரமாகி உள்ள மகாராஷ்டிராவில் விரைவில் சலூன், உடற்பயிற்சி கூடங்களை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா தொற்றில் நாட்டிலேயே முதல்மாநிலமாக திகழும் மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 1லட்சத்து 42 ஆயிரத்து 900 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6739 பேர் பலியாகி உள்ளனர். தற்போதைய நிலையில், 72ஆயிரத்து 369 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 73ஆயிரத்து 792 பேர் நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மகாராஷ்டிராவின் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியான தாராவியிலும் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அங்கு சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதைத்தொடர்ந்து,  கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ள  உடற்பயிற்சி கூடங்கள், முடிவெட்டும் கடைகளை திறக்க மாநில அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா அமைச்சர் அஸ்லம் ஷேக்கின் சில அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் மூலம்,  விரைவில் ஜிம், லூன் ககைளை திறப்பதற்கான  விழிக்காட்டுதல்களுடன் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும்  கூறப்படுகிறது.