மது பாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டும் போதுமா: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சுளீர்

சென்னை:

துவால் மக்களைக் கெடுத்து வருவாய் ஈட்டுவது குறித்து தமிழக அரசு சிந்திக்க வேண்டும் என்றும்  மது கொள்கையை தமிழக அரசு மாற்ற வேண்டும் என சென்னை  உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் படூரில் கல்லூரிக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கூறியதாவது:

டாஸ்மாக் கொள்கை முடிவில் மாற்றம் கொண்டு வர வேண்டிய நேரம் இது. டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆகவே  மதுக்கடைகள் தொடர்பான கொள்கை முடிவை தமிழக அரசு மாற்ற வேண்டும். உறுதியான கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

விதிகளுக்கு உட்பட்டு டாஸ்மாக் கடைகள் அமைத்தாலும் மக்கள் நலனை கருத்தில் கொள்ள வேண்டியதும் அவசியம். மக்கள் நலனுக்காக மதுவிற்கிறோம் என அரசு கூற முடியாது. மக்களின் வாழ்வை கெடுத்து வருவாய் ஈட்டினால் மட்டும் போதாது.

பல்வேறு குற்ற சம்பவங்களுக்கும் மது காரணமாகி விடுகிறது. மது வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டும் போதாது” என்று  நீதிபதி அறிவுரை வழங்கினார்.