லையுலகுக்கு வந்த சிறிது காலத்தில் புகழ் பெற்று மக்கள் மனதில் இடம்பெற்றிருந்த சவுந்தர்யா என்ற கலையுலக  நட்சத்திரம் வானிலே எரிந்து விட்டது. பா.ஜ.கவுக்காக தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற நடிகை சவுந்தர்யா விமான விபத்தில்  பலியானார். உடன் சென்ற அவரது சகோதரர் அமர்நாத் உள்பட மேலும் இருவரும் பலியாயினர்.

32 வயதான சௌந்தர்யா தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகும் மதுமதி உள்ளிட்ட தமிழ், கன்னடப் படங்களில்  நடித்துக் கொண்டிருந்தார்.  இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் மறைந்த நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை வரலாறை சினிமா படமாக தயாரிக்க பிரபல தயாரிப்பாளர் ராஜகந்துகுரி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் சவுந்தர்யாவின் வாழ்க்கையை படமாக எடுக்கப் போவதாக  ராஜ்கந்துகுரி அறிவித்து உள்ளார். சவுந்தர்யாவாக நடிக்க பொருத்தமான நடிகை மற்றும் இயக்குனர் தேர்வு நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் வெளியான மறைந்த நடிகை சாவித்ரி வாழ்க்கை கதை ‘நடிகையர் திலகம்’ பெயரில் தயாராகி திரைக்கு வந்து வெற்றி பெற்றுள்ள நிலையில் சவுந்தர்யா வாழ்க்கை வரலாரற படமாக தயாரிக்க முன்வந்துள்ளார் தயாரிப்பாளர்.