தொடரும் நெடுவாசல் போராட்டம்!

புதுக்கோட்டை:

புதுக்கோட்ட மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று கோரி நடந்து வரும் மக்கள் போராட்டம் 18 நாட்களைக் கடந்து தொடர்கிறது.

இதற்கிடையே இத்திட்டத்தை எதிர்த்து போராடி வந்த கோட்டைக்காடு போராட்டக் குழுவினருடன் மாவட்ட ஆட்சியர் கணேஷ், மாவட்ட எஸ்.பி. லோகநாதன் ஆகியோர் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆறு  மணிநேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கோட்டைக்காடு மக்கள், போராட்டத்தை கைவிடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் இப்பகுதியில் பெரும்பாலான மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

“ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கப்போவதில்லை” என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நெடுவாசலில் 18-வது நாளாக கிராம மக்கள் போராட்டத்தில் தொடரந்து ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.