சபரிமலை தொடர்பான வழக்குகளை முன்கூட்டியே விசாரிக்க முடியாது: உச்சநீதி மன்றம் மீண்டும் மறுப்பு

டில்லி:

பரிமலை தொடர்பான மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை முன்கூட்டியே விசாரிக்க முடியாது என்று உச்சநீதி மன்றம் மீண்டும் மறுத்து உள்ளது.

ஏற்கனவே மேல்முறையீடு தொடர்பான வழக்களை ஜனவரிக்கு ஒத்தி வைத்த நீதி மன்றம், தொடர்ந்து அடுத்த நாள் வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதியிடம் முறையிட்டும் விசாரிக்க மறுத்தது.

இந்த நிலையில், இன்று மீண்டும் முறையிடப்பட்டது. ஆனால், வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது என்று உச்சநீதி மன்றம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

சபரிமலை கோவிலுக்கு  அனைத்து வயது  பெண்களும்  செல்லலாம் என ஏற்கனவே உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி பலமுறை முறயிட்டும், வழக்குகளை முன்கூட்டியே விசாரிக்க முடியாது என்று உச்சநீதி மன்றம் கறாராக தெரிவித்து உள்ளது.

சபரிமலை தொடர்பான அனைத்து வழக்குகளும் னவரி 22ல் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

அய்யப்பன் கோவில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு கடந்த 16ந்தேதி முதல் பக்தர்கள் சென்று வருகிறார்கள்.  இந்த நிலையில் பெண்கள் செல்ல தடைவிதிக்க வேண்டும் என்று  மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதை விசாரித்த உச்சநீதி மன்றம்,  ஜனவரி 22ந்தேதிக்கு முன்னர் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

கார்ட்டூன் கேலரி