விவசாயிகள் தற்கொலை… : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு

டில்லி:
விவசாயிகள் தற்கொலை குறித்து மத்திய அரசு விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நான்கு வாரம் கெடு விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

நாடு முழுதும் தொடரும் விவசாயிகள் தற்கொலையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இதில் மத்திய அரசின் சார்பில் முழுமையான அறிக்கைகள் எதுவும் தாக்கப்படவில்லை.

இதையடுத்து இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள், “விவாசாயிகள் தற்கொலை என்பது மிகக் கவலைக்குரிய விசயமாகும். இது குறித்து மத்திய அரசு, விரிவான அறிக்கை அளிக்க வேண்டும். இந்த தற்கொலைகளை தடுக்க எந்த மாதிரியான செயல் திட்டங்களை வைத்துள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும். நான்கு வாரத்துக்குள் இந்த அறிக்கையை கோர்ட்டில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

விவசாயிகள் தற்கொலை விசயத்தில் இனியாவது மத்திய அரசின் மெத்தனப்போக்கு நீங்கி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.