காஷ்மீர் சிறுமியின் குடும்பம், வழக்கறிஞருக்கு பாதுகாப்பு வழங்க உச்சநீதி மன்றம் உத்தரவு

ஸ்ரீநகர்:

ம்மு காஷ்மீரில் கத்துவா பகுதியில்  கொல்லப்பபட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கும், சிறுமிக்காக வாதாட உள்ள வழக்கறிஞருக்கும்  பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஜம்மு மாநில அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

காஷ்மீரில் 8 வயது சிறுமி பலரால் வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல மாநிலங்கள், மாவட்டங்களில் பொதுமக்கள் நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அந்த சிறுமிக்காக வாதாட  வழக்கறிஞர் தீபிகா ராஜாவத் என்பவர் முன்வந்துள்ளார். அவருக்கு பல இடங்களில் இருந்து மிரட்டல் வருவதாகவும், தன்னை  தன்னை வன்புணர்வு செய்து கொலை செய்வோம் என சிலர் மிரட்டி வருகின்றனர் என கூறினார்.. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் சிறுமியின் தந்தை உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

வழக்கறிஞர் தீபிகா

இந்த வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறுமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தீபிகா, சிறுமியின்  வழக்கை சண்டிகர்  மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றும், தனக்கும், சிறுமியின் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரினார். மேலும் இந்த வழக்கு குறித்த விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

ஆனால், உச்சநீதி மன்றம், வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றுவது குறித்து மாநில அரசு பதில் அளிக்க கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும், சிறுமியின் குடும்பத்தினருக்கும், சிறுமி வழக்கில் வாதாடும் வழக்கறிஞருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
தற்போதைய நிலையில்  வழக்கை ஜம்மு போலீசார் திறமையாக விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்துள்ளனர் என்றும், எனவே விசாரணையில் தொய்வு ஏற்பட்டால்,  சிபிஐ விசாரணைக்கு அப்போது  மாற்றிக்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் கூறி உள்ளனர்.

அதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை வரும் 27ந்தேதிக்கு உச்சநீதி மன்றம் ஒத்தி வைத்துள்ளது.

You may have missed