மேகதாது அணை விவகாரம்: விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்

டில்லி:

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த மனுவுக்கு கர்நாடக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், இதுகுறித்து பதில் அளிக்க தமிழக அரசு அவகாசம் வழங்கிய உச்சநீதி மன்றம் வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாது மலைப்பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வளத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கா்நாடகாவுக்கு திட்ட அறிக்கை சமா்ப்பிக்க அனுமதி வழங்கப்பட்டது சட்ட விரோத மானது. காவிாி மேலாண்மை ஆணையத்திற்கும், மத்திய நீா்வள ஆணையத்திற்கும் ஒரே நபா் தலைமை வகிப்பதால் அவா் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும், கா்நாடகாவிற்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெறவேண்டும் என்றும் தமிழக அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, மேகதாது அணை சம்பந்தமாக கர்நாடகாவின்  திட்ட அறிக்கைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நீா்வள  ஆணையம் உச்சநீதி மன்றத்தில் தொிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து, நேற்று  கர்நாடக அரசு சார்பில் நேற்று விரிவான  அறிக்கை தாக்கல் செய்யப்பபட்டது.

அதில், மத்திய நீா்வள ஆணையத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ள திட்ட அறிக்கையில், அணை தொடா்பாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்கள் கருத்து தொிவிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடக அரசின் திட்ட அறிக்கை  குறித்து தமிழக அரசு 4 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதி மன்றம், வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.