டில்லி,

ல்லிக்கட்டு குறித்த வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

ஜல்லிக்கட்டுக்கு விலங்குகள் நல வாரியம் மற்றும் பீட்டா அமைப்பு காரணமாக உச்ச நீதி மன்றம் தடை விதித்தது. இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை.

அதைத்தொடர்ந்து,  தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் அமைதிவழியிலான போராட்டம் தொடங்கினர்.

பொங்கலன்று மதுரை அலங்காநல்லூரில் ஆரம்பித்த போராட்டம், போராட்டம் சென்னை மெரீனா முதல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுக்க வேண்டியும், பீட்டாவை தடை செய்ய கோரியும்  அறப்போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தமிழக இளைஞர்களின் போராட்டம் காரணமாக, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு குறித்த எந்தவிதமான தீர்ப்பும் ஒரு வார காலத்திற்கு வழங்கக்கூடாது என மனு செய்து, உச்ச நீதி மன்றத்தின் அனுமதியும் வாங்கியது.

அதைத்தொடர்ந்து மத்தியஅரசின் ஆலோசனையின் பேரில் தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி யது. பின்னர் அந்த சட்டம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறை வேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஜனாதிபதியும் தமிழக சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துவிட்டார்.

இதன்மூலம் ஜல்லிக்கட்டுக்காக கொண்டு வரப்பட்ட மசோதா, சட்டமாகியுள்ளது. இது தமிழக அரசின் கெசட்டில் வெளியிடப்பட்ட பின்,  ஜல்லிக்கட்டு சட்டம் நடைமுறைக்கு வரும்.

இதற்கிடையில், தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்ட மசோதாவுக்கு , இந்திய விலங்குகள் நல வாரியம், பீட்டா, கியூப்பா போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதி மன்றத்தில் மேலும் வழக்குகளை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் இன்று  உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவாராய் அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது.

காளைகள் துன்புறுத்தப்படுவதால், விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் படியும், காட்சிப் படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் காளைகள் சேர்க்கப்பட்டிருப்பதன் அடிப்படையிலும், கடந்த 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும், கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 7-ந் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கைக்கும் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இந்நிலையில், தற்போது தமிழக அரசு இயற்றியுள்ள சட்டத்திற்கு ஏதுவாக, மத்திய அரசும், காளைகளை காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு ஏதுவாக, 201ம் ஆண்டு வழங்கப்பட்ட ஆணையை திரும்ப பெறுவதாக மனு தாக்கல் செய்துள்ளது.

இதுவும்,  அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று பீட்டா உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று நடக்கும் விசாரணையில், தமிழக அரசு கொண்டுவந்துள்ள அவசர சட்டம் குறித்தும் விவாதம் நடைபெறும் என தெரிகிறது. தமிழக அரசின் சட்டம் செல்லுமா? செல்லாதா? என்று இன்று மாலை தெரியவரும் ….

நல்லதையே நாமும் எதிர்பார்ப்போம்…