டில்லி:

.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கை தெலங்கானா காவல்துறையினர் விசாரிக்க உச்சநீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகன் மீது, அவர் கீழ் பணியாற்றிய பெண் எஸ்பி பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் தமிழக காவல்துறையின் விசாரணை அறிக்கையை ஏற்காத சென்னை உயர்நீதி மனற்ம், இந்த  வழக்கின் விசாரணையை தெலுங்கானா மாநில காவல்துறை விசாரணை நடத்தி அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த மாதம் (ஆகஸ்டு 28ந்தேதி) உத்தரவிட்டது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக காவல்துறையின் விசாரணையை சென்னை உயர்நீதி மன்றம் நம்பாததாக கூறப்பட்டது. இதுகுறித்து சென்னை உயர்நீதி மன்றமும் விளக்கம் அளித்தது. அப்போது, வழக்கை, வேறு மாநிலத்திற்கு மாற்றுவதால், தமிழக போலீசார் மீது நம்பிக்கையில்லை என்பது அர்த்தமாகாது என்று கூறிய நீதிபதி, வழக்கு ஆவணங்களை தமிழக தலைமை செயலர் உடனடியாக, தெலுங்கானா தலைமை செயலருக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து, ஐ.ஜி முருகன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. அதேபோல் பாலியல் புகார் பற்றி பதிலளிக்க பெண் எஸ்.பி மற்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.