வழக்கறிஞர்கள் சான்றிதழ்களை ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

டில்லி,

ந்தியா முழுவதும் உள்ள போலி வழக்கறிஞர்களை நீக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம், வழக்கறிஞர்கள் தங்கள்  சான்றிதழ்களை சரிபார்க்க ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளது.

 

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 10 மாநிலங்களில் அதிக அளவிலான போலி வழக்கறிஞர்கள் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.

supreme

மாநில பார் கவுன்சில்களுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகம், புதுச்சேரி, டெல்லி, பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களில் அதிக அளவிலான போலி வழக்கறிஞர்கள் இருப்பதாக இந்திய பார் கவுன்சில் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து விளக்கமளித்த தமிழ்நாடு பார் கவுன்சில் தரப்பு வழக்கறிஞர், புதிய வழக்கறிஞர்களின் பட்டப்படிப்பு சான்றிதழ்களை சரிபார்க்க ஆயிரத்து 500 ரூபாய் வரை சட்ட பல்கலைக்கழகங்கள் வசூலிப்பதாக புகார் தெரிவித்தார்.

இதைக்கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், நாடு முழுவதுமுள்ள சட்டப் பல்கலைக்கழகங்களை எதிர் மனுதாரராக வழக்கில் சேர்க்குமாறு உத்தரவிட்டனர்.

இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் கூறியதாவது:

வழக்கறிஞர்கள் தங்கள் சான்றிதழ்களை சரிபார்ப்பு பணிகளுகாக  சமர்ப்பிக்க  நவம் 30ம் தேதிவரை காலகெடு நீடித்து உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி 31 ஆம் தேதிக்குள் சமர்பிக்கப்பட்ட வழக்கறிஞர்களின் சான்றிதல்களை சட்ட பல்கலைகழகங்கள் சரிபார்த்துவிட வேண்டும்  என்றும்,

சான்றிதல்கள் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் பிப்ரவரி முதல்வாரத்திற்குள் இந்திய பார்கவுன்சில் நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி