டில்லி,

ர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் பங்கு குறித்த விசாரணை அறிக்கையை வரும் 23ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஐக்கு, உச்சநீதிமன்றம் அதிரடி  உத்தரவு பிறப்பத்துள்ளது.

 

மத்தியில் தேசிய ஜனநாய கூட்டணி ஆட்சியின்போது, ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தார். அப்போது மாறன் சகோதரர்களுக்கு ஆதரவாக  ஏர்செல் நிறுவனப் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்தது.

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு விவகாரத்தில்  கார்த்தி சிதம்பரத்தின் அட்வான்டேஜ் கன்சல்டிங் நிறுவனம் ஆதாயம் அடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ கார்த்தி சிதம்பரத்தை விசாரணைக்கு அழைத்து தொல்லை கொடுத்தது.

விசாரணைக்கு அவர் ஆஜராகாததால்,  கார்த்தி சிதம்பரத்தினைக் கண்காணிக்கப்படும் நபராக லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணையை சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே முடித்து வைத்து விட்ட நிலையில், சிபிஐ அழைப்பாணை அனுப்புவது முரணாக உள்ளது என்று சிபிஐ சம்மனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம்  உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையை ஒத்தி வைத்த நீதி மன்றம், ஏர்செல் மேக்சில் வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

விசாரணையில் இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள்,  ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் பங்கு என்ன என்பது குறித்து விரிவான அறிக்கையை வரும் 23ந்தேதிக்கு முன்பு  தாக்கும்படி  சிபிஐக்கு உச்சநீதி மன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.