டில்லி:

ஸ்டெர்லைட் ஆலை குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர ஆலை காரணமாக அந்த பகுதிமக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக உயிர்க்கொல்லி நோய்களான கேன்சர், மூச்சுத்திணறல், சிறுநீரகம் செயலிழப்பு, கருச்சிதைவு போன்ற நோய்களால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆலையை சுற்றி உள்ள கிராம மக்கள், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுதிதி கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ம்க்களுக்கு நோய்களை பரப்பி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிடக்கோரி பூவுலகின்  நண்பர்கள் அமைப்பு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  ஆலையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேள்வி எழுப்பிய உச்சநீதி மன்றம், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலை நிர்வாகம் பதில் தெரிவிக்க காலக்கெடு விதித்து விசாரணையை தள்ளி வைத்தது.