சபரிமலைக்கு பெண்கள் அனுமதிப்பது தொடர்பான உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதி மன்றம் மீண்டும் மறுப்பு

--

டில்லி:

சபரிமலைக்கு அனைத்து வயது  பெண்களும்  செல்லலாம் என ஏற்கனவே உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க உச்சநீதி மன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்து உள்ளது.

மேல்முறையீடு மனுக்கள் மீது நேற்று உத்தரவு பிறப்பிக்க மறுத்த உச்சநீதி மன்றம், விசாரணை ஜனவரி 22ந்தேதி மீண்டும் நடைபெறும் என்று வழக்கை ஒத்தி வைத்தது.

இந்த நிலையில், இன்று மீண்டும் பெண்களை அனுமதிக்கும் உத்தரவுக்கு இடைகால தடை கோரி முறையீடு செய்யப்பட்டது.  அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதி மன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

அய்யப்பன் கோவில் மண்டல பூஜை நாளை மறுதினம் (16ந்தேதி) தொடங்க உள்ள நிலையில், பெண்கள் வருவது குறித்த உச்சநீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மறு ஆய்வு மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.

விசாரணையை தொடர்ந்து,, ஏற்கனவே வழங்கப்பட்ட உத்தரவில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறி ஜனவரி 22ந்தேதிக்கு தள்ளி வைத்தது.

இந்த நிலையில்,இன்று மீண்டும், பெண்கள் அனுமதிப்பது தொடர்பான தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி முறையிடப்பட்டது. அதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இது தொடர் பாக ஜனவரி 22ந்தேதிக்கு முன்னர் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

இதற்கிடையில், சபரிமலை விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு கேரள மாநில முதல் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். நாளை திருவனந்தபுரத்தில் கூட்டம் நடைபெற உள்ளது.