துணை நிலை ஆளுநர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நீதிமன்றம் தீர்ப்பு

யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக முதல்வர், துணை நிலை ஆளுநர் இடையேயான மோதல் குறித்த வழக்கில் தற்போது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீர்ப்பை படித்து வருகிறார்கள்.

டில்லியில், முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம் என்ற மோதல் ஏற்பட்டது.

இது தொடர்பாக ஆம் ஆத்மி அரசு டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. “ஆட்சி நிர்வாக அதிகாரம், துணை நிலை ஆளுநருக்கு மட்டுமே உள்ளது’ என, டில்லி உயர்நீதிமன்றம், 2016ம் ஆண்டு ஆக., 4 அன்று தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து, டில்லி அரசு பல்வேறு வழக்குகளை, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தது. ‘சட்டம் மற்றும் அரசியல் அமைப்பு சட்டம் தொடர்பானகேள்விகள் எழுவதால், இந்த வழக்கை, அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும்’ என, டில்லி அரசு கோரி வந்தது. மேலும் இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தது.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தன. ‘ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு மாற்றுவது குறித்து, விரைவில் முடிவு எடுக்கப்படும்’ என, அமர்வு கூறியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி சார்பில் பி.சிதம்பரம், கோபால் சுப்பிரமணியம், ராஜிவ் தவான், இந்திரா ஜெய்சிங் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். மத்தியஅரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மனிந்தர் சிங் வாதாடினார்.

இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது நீதிபதிகள் தீர்ப்பை படித்து வருகிறார்கள்.

இதுவரை வாசிக்கப்பட்ட தீர்ப்பில், “கூட்டாட்சி தத்துவத்தை மதித்து ஆளுநரும் அரசும் இணைந்து செயல்பட வேண்டும்.   எல்லா விசயங்களிலும் அமைச்சரவை துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அவசியமில்லை.  ஆளுநருக்கு என்று தனி அதிகாரம் கிடையாது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு துணை ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும். அமைச்சரவையுடன் துணை நிலை ஆளுநர் இனக்கமாக செய்லபட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முழுமையான தீர்ப்பு இன்னும் சிறிது நேரத்தில் வெளியாகும்.