ரஷ்யாவின் வெற்றிக் கொண்டாட்டத்தில் நிரம்பி வழிந்த குப்பைகள்

21வது ஆண்டு உலக கோப்பை போட்டி ரஷ்யாவில் கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் ரஷ்யாவில் உள்ள பிரபல மைதானங்கள் ரசிகர்களால் நிரம்பி திருவிழா போன்று காட்சி அளிக்கிறது. திங்கட்கிழமை ஸ்பெயினை எதிர்த்து ரஷ்யா மோதியது. இந்த போட்டியில் ஸ்பெயின் தோற்கடிக்கப்பட்டதை ரஷ்யாவின் ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
moscow
தனது நாட்டிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் மாஸ்கோ மைதானத்தில் திரண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். ரஷ்யாவில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகள் சிகரெட் துண்டுகள், பாட்டில்கள் மற்றும் பிற பொருள்களினால் குவிந்து கிடந்தன.

ரஷ்யாவில் அனைத்து பகுதிகளிலும் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலாளர்கள் கூறுகையில்” இது போன்ற ஒரு கொண்டாட்டத்தை நாங்கள் பார்த்ததில்லை. அனைத்து இடங்களிலும் ரசிகர்கள் பயன்படுத்திய பொருள்கள் குப்பைகளாக நிரம்பியுள்ளன. வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் குப்பைகள் இருக்கின்றன. நேற்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்க முடியாத அளவில் ரஷ்யாவின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினர்” என்று கூறினர்.
Russia
துப்புரவு தொழிலாளியான பர்தயாவ்” இரண்டு வருடமாக நான் இந்த தொழிலை செய்து வருகிறேன். இது போன்ற ஒரு கொண்டாட்டத்தை பார்த்ததில்லை. நேற்றிரவு ரஷ்யா போட்டியில் வெற்றிப்பெறும் என்பதை முன்கூட்டியே அறிந்தது போல் ரசிகர்கள் தராயாக மைதானத்திற்கு வந்தனர்” என்று கூறினார்.

இந்நிலையில் 22வயதான ரஷ்யா அணியின் ரசிகையான மரியா “ நாங்கள் குடித்தோம், மது அருந்திக்கொண்டே பாட்டு பாடினோம். இதனால் எனது தொண்டையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது “ என்று கூறினார்.

ரஷ்யாவின் சட்டத்துறை அதிகாரிகாரியான மிலோனோவ் “ ரஷ்யாவின் மக்கள் விரும்பினால் கொண்டாட்டத்தை தொடர்ந்து அவர்கள் ஓய்வு எடுக்க ஒரு நாள் அல்லது அரைநாள் விடுப்பு எடுத்து கொள்ள அனுமதிக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு மாஸ்கோவில் உள்ள லூக்னிகி மைதானத்தில் ஸ்பெயினுடன் ரஷ்யா மோதியது. இதில் 4-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை ரஷ்யா வென்ற்றிக்கொண்டது. இந்த வெற்றியை தொடர்ந்து ரஷ்யா அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது