இந்தியாவிலேயே உயரமான கட்சி கொடி கம்பம்: அண்ணா அறிவாலயத்தில் நட இருப்பதாக திமுக அறிவிப்பு

சென்னை:

ந்தியாவிலேயே மிக  உயரமான கட்சி கொடி கம்பம், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நட இருப்பதாக திமுக தலைமை அறிவித்து உள்ளது. இந்த கொடி கம்பத்தின் உயரம் 114 அடியாகும்.

திமுக முன்னாள் தலைவர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் திருஉருவ சிலை, டிசம்பர் மாதம் 16ந்தேதி  அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்படும் என்று திமுக தலைமைக் கழகம்  அறிவித்து உள்ள நிலையில், அறிவாலய வளாகத்தில் 114 அடி உயர கொடி கப்பம் நட்டப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இவ்வளவு உயரத்திலான கொடி கம்பம் வேறு எந்த கட்சிகளுக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, சிலை தயாரான நிலையில் நிறுவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள அண்ணா சிலை அருகே கருணாநிதியின் சிலையையும் அமைக்க முடிவு செய்து, அண்ணா சிலை அகற்றப்பட்டு, ஒரே இடத்தில் இரு சிலைகளையும் நிறுவும்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கருணாநிதி சிலை திறப்பு விழா டிசம்பர் 16ந்தேதி நடைபெறுகிறது. விழாவில்,  முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட வட இந்திய அரசியல் கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் என ஏராளமானோர் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த நிலையில்  அண்ணா அறிவாலயத்தில்114 அடி உயரத்தில் கொடிக்கம்பம் அமைக்கும் முயற்சியிலும் திமுக தலைமை ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவிலேயே மிக உயரமான கொடி (365 அடி) கம்பத்தில் தேசியக்கொடி கர்நாடகாவில் பறக்க விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.