சென்னை: கொரோனாவுக்கு தமிழக அரசு ரூ7,167.97 கோடி செலவு செய்துள்ளது என்று துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

இன்றை பேரவை கூட்டத்தில் கொரோனா தொடர்பாக அரசுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் காரசார விவாதங்கள் நடைபெற்றன. இந்த விவகாரத்தில் தமிழகஅரசு வெள்ளைஅறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இதையடுத்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றினார்.

அப்போது,  தமிழக அரசுக்கு கொரோனாவால் நிதி நெருக்கடி ஏற்பட்டும், முதல்வருக்கு கொரோனா நிதி வழங்கும் திட்டத்தின் மூலம் அரசு தனது சேவையை தொடர்ந்தது.

இந்த நிலையில் இதுவரை கொரோனாவுக்கு தமிழக அரசு ரூ.7167.97 கோடி செலவு செய்துள்ளது. நிவாரண தொகையாக   ரூ4,896.05 கோடியும், தனிமைப்படுத்தலுக்கு ரூ262.25 கோடியும் , மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்க ரூ830.60கோடியும் ,  மருத்துவ கட்டுமான பணிக்கு ரூ147.10 கோடியும் , கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு ரூ638.85 கோடியும் செலவிடப் பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.