ஜனவரி முதல் வாரத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுமென தகவல்

சென்னை:
மிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறுமென தகவல் வெளியாகி உள்ளது.

ஆண்டு தோறும் ஜனவரி முதல் வாரத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்குவதை போலவே இந்த ஆண்டும் கூட்டத்தொடர் தொடங்குமென துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.

ஆனால் கூட்டம் எப்போது தொடங்கும், எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது பின்னர் முடிவு செய்யப்படுமென அவர் குறிப்பிட்டார். இந்த கூட்டத்தொடரில் முதலமைச்சர் அறிவித்தது போல, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், மோகன் குமாரமங்கலம், வ.உ.சிதம்பரனார் ஆகியோரின் உருவ படங்கள் சட்டசபையில் திறக்கப்படுமென அவர் தெரிவித்தார்.

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிலையில், அடுத்து வரும் கூட்டத்தொடர் கோட்டையில் உள்ள சட்டசபை அரங்கிலேயே நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.