தமிழகஅரசு ஊழியர் சங்க வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது

சென்னை,

று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர் சங்கத்தினர் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளளனர்.

இதன் காரணமாக தமிழக அரசு துறைகளின் வேலைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வணிகவரித்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட 61 சங்கங்களைச் சேர்ந்த சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்  இந்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

அவர்களின் முக்கிய கோரிக்கையான, பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும் என்றும், , புதிய ஊதிய மாற்றம் செய்யப்படும் வரை இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், காலமுறை ஊதியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட6 அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறது.

அரசு ஊழியர்கள் போராட்டத்தால் அரசு சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.