Random image

கவர்னரை தட்டிக்கேட்க துணிச்சலற்ற தமிழகஅரசு: திருநாவுக்கரசர்

சென்னை:

மிழக கவர்னரின் செயல்பாடுகளை  தட்டிக்கேட்க தமிழக அரசுக்கு துணிச்சல் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைலைவர்  திருநாவுக்கரசர் கடுமையாக சாடினார்.

ஆளுநர் மாவட்டம் வாரியம் ஆய்வு செய்து வருவதற்கு திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில்,  சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் செய்தி யாளர்களிடம்  கூறியதாவது:-

காவிரி மேலாண்மை ஆணையம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி அமைக்கப்பட்டுள்ளது. இன்று  காவிரி ஆணையத்தன் முதல் கூட்டம் நடைபெறுகிறது. இந்த  கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்கும் பிரதிநிதிகள் தமிழக உரிமையை வற்புறுத்த வேண்டும் என்று கூறினார்.

இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு ஒத்துழைப்பு தரவில்லை என்றால் மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்றும்,  பிரதமரை அணுகி வலியுறுத்த வேண்டும், தேவைப்படில் நீதிமன்றத்துக்கும் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.

பல ஆண்டு போராட்டங்களுக்கு பின் உச்ச நீதிமன்றத்தின் வழங்கிய  இறுதி தீர்ப்பு மூலமாக கிடைத்த வெற்றியை  தக்க வைக்க வைப்பதும், வாய்ப்பை நழுவவிடாமல் பாதுகாக்கவும்,  அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தின் மூலமாக காவிரி தண்ணீரை பெற வேண்டியது தமிழக அரசின் கடமையும் பொறுப்பும் என்று  தெரிவித்தார்.

காவிரி பிரச்சினை குறித்து, கர்நாடகாவில் அனைத்து கட்சிகளை கூட்டி கூட்டம் நடத்தி விவாதித்து  உள்ளனர். தமிழகத்தில் தேவையென்றால் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும்,  இந்த விவகாரத்தில், தமிழக அரசு  சட்டரீதியாகவும், அரசு ரீதியாகவும் தமிழ்நாட்டின் உரிமையை காக்க முயற்சி செய்ய வேண்டும் என்றார்.

மேலும், தமிழக அரசு,  கவர்னர் வி‌ஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதுவும் மக்கள் பிரச்சனை தான் என்றவர்,  அரசு செயல்பாட்டில், அரசு முடங்குகிற  விதத்தில் கவர்னர் செயல்படுவதை எதிர்கட்சி தான் கேட்க முடியும். தற்போதுள்ள தமிழக அரசுக்கு கவர்னரின் செயல்பாட்டை தட்டி கேட்கக்கூடிய தைரியம், துணிச்சல் இல்லை என்று கடுமையாக சாடினார்.

கவர்னருக்கு எதிரான கருப்பு கொடி போராட்டம் குறித்த கேள்விக்கு,  ஜனநாயகத்தில் கருப்பு கொடி காட்டுவது வெளி நடப்பு செய்வது என்பதெல்லாம்  ஒரு பகுதி என்ற திருநாவுக்கரசர்,  தமிழிசைக்கு அது தெரியாமல் இருக்கலாம். எதிர்கட்சியாக வரும்போது இவைகள் குறித்து அவருக்கு  தெரிய வரும் என்று கூறினார்.

மிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். அப்போது அரசு அதிகாரிகளையும், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரையும் தனியாக சந்தித்து வருகிறார்.

ஆளுநரின் இந்த செயல்பாடு அரசியல் சட்டத்திற்கு முரணனானது என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து, ஆளுநர் ஆய்வின்போது அவருக்கு எதிராக கருப்புகொடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் ஆளுநரின் ஆய்வை தடுப்பவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்று ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டு மிரட்டியது.

இதன் காரணமாக மேலும் கோபமடைந்துள்ள திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், அடுத்த முறை ஆளுநர் ஆய்வின்போது தானே நேரடியாக களமிறங்கப்போவதாக அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.