82 விவசாயிகள் மட்டுமே தற்கொலை! தமிழக அரசு சொல்கிறது

சென்னை,

மிழகத்தில் இதுவரை  82 விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்துள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

இது விவசாயிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக சுமார் 400க்கும் மேற்பட்ட விசாயிகள் இறந்துள்ளதாக விவசாய சங்கங்கள் கூறி வருகின்றன. அதற்கான இழப்பீடு கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை 82 விவசாயிகள்  மட்டுமே  தற்கொலை செய்துள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மரணமடைந்த  83 விவசாயிகளின் குடும்பங்களுக்கும்  இழப்பீடு தரப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்றும் வேளாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

இது விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்துள்ளார்கள் என்றும், அதற்காகவே டில்லியிலும், தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

அப்படியிருக்கும்போது தற்கொலை எண்ணிக்கையை குறைத்து மதிப்பிட்டுள்ளதாக தமிழக அரசுமீது விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.