சிலை கடத்தல் வழக்கு: தமிழக அரசுக்கு ஆதரவாக கோவில் அதிகாரிகள் சார்பில் மனுதாக்கல்

சென்னை:

மிழகத்தில் நடைபெற்று வந்த சிலை கடத்தல் மற்றும் சிலைகள் செய்ததில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவதாக தமிழக அரசு அறிவித்தது.

தமிழக அரசின் அறிவிப்புக்கு சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நிலையில்,  சிலை கடத்தல் வழக்குகளை தமிழக அரசு சிபிஐக்கு மாற்றியது சரிதான் என்று,  தமிழ்நாடு கோவில் செயல் அதிகாரிகள் பேரவை சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் இணைப்பு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று வந்த சிலை கடத்தல் மற்றும் சிலை செய்ததில் நடை பெற்ற முறைகேடுகள் குறித்து ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்த விசாரணையில் திருப்தி இல்லை என்று கூறி, தமிழக அரசு சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு  அரசாணை வெளியிட்டது.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழக அரசின் அரசாணைக்கு சென்னை உயர்நீதி மன்ற அமர்வு இடைக்கால தடை  விதித்துள்ளது. சென்னை உயர்நீதி மன்றத்தின் தடையை நீக்கக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.