நெட்டிசன்:

அன்பழகன் வீரப்பன் அவர்களது முகநூல் பதிவு:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பேர்னாம்பட் வட்டம் பத்தலப்பல்லி கிராமத்தில் உள்ள ஊராட்சி தொடக்க பள்ளியில் சுமார் 205 மாணவ மாணவியர் படிக்கின்றனர் அவர்களுக்கு ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே இருந்துள்ளது. அதனால், மாணவ மாணவியர் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள். அதனால் கழிப்பறைகள் கட்டி கொடுக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

அனைவருக்கும் கல்வி திட்டத்தில் கழிப்பறைகட்ட ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் ஒதுக்கப்பட்டது இதில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான அதிநவீன கழிப்பறை கட்ட முடிவு செய்து இந்தியன் டாய்லெட் ஒன்றும் வெஸ்டர்ன் டாய்லேட் ஒன்றும், மாணவர் சிறுநீர் கழிக்க 6 தொட்டிகள் மாணவிகள் பயன்படுத்த மேடை அமைப்பும் சிறுநீர் கழித்த பின் சுத்தம் செய்து கொள்ள குழாய்களும் பொருத்தப்பட்டது

இவையெல்லாம் பார்த்து பார்த்து தலைமை ஆசிரியர் தன் சொந்த குழந்தைகளுக்கு செய்வது போல் செய்யப்பட்டது. இவ்வாறு செய்து முடிக்க 65000 கூடுதல் செலவாகியுள்ளது.

இந்த கூடுதல் செலவினத்தை பத்தலபல்லி ஊராட்சி துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் பொன்.வள்ளுவன் அவர்களின் சொந்த பணத்தில் கட்டிமுடித்தார்.இந்த நவின கழிப்பறையை வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு.ராமன் அவர்கள் திறந்து வைத்து தலைமை ஆசிரியர் பொன்.வள்ளுவனை பாராட்டினார்.

இதனால் மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

(செய்தி: ஞானவேல், குடியாத்தம்)