அதிநவீன வசதிகளுடன் கூடிய ‘தேஜஸ்’ ரயில்: சென்னை டூ மதுரை விரையில் இயக்க முடிவு

சென்னை:

திநவீன வசதிகளுடன் சென்னை ஐசிஎப் ரயில்பெட்டி தொழிற்சாலையில் தயார் செய்யப்பட்டு உள்ள  ‘தேஜஸ்’ ரயில் விரைவில் சென்னை மதுரை இடையே இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்து உள்ளது.

இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு ஆறரை மணி நேரத்தில் சென்றடையும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

தேஜாஸ் ரயில் பெட்டியின் உள்அமைப்பு

அதி நவீன வசதிகளை கொண்ட இந்த சொகுசு ஏசி ரயில் பெட்டிகளில்  விமான இருக்கைகள் போன்ற சொகுசு இருக்கைகள்,  ஜிபிஎஸ், பாடல்கள் கேட்க வசதியான எல்இடி டிவி, தானியங்கி கதவு, வைபை, உயர்தரமான கழிவறை போன்றவை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும,ஜிபிஎஸ் அடிப்படையிலான பயணிகள் தகவல் அறியும் வசதி, எல்ஈடி விளக்குகள்,  பயணிகள் இருக்கைகளின் கைப்பிடியில் உள்புறம் மடக்கி அமைக்கப்பட்டுள்ள வெளியே தெரியாத சிற்றுண்டி மேசைகள், இருக்கைகளின் பின்புறம் செல்பேசி சார்ஜிங் செய்யும் வசதி போன்ற வசதிகளும் உருவாக்கபட்டுள்ளன.

‘இந்த பெட்டி சென்னையில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டு, தற்போது ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இந்த ரயில் விரைவில் சென்னை மதுரை இடையே இயக்கப்பட உள்ளது. மணிக்கு சுமார் 70கி.மீ  வேகத்தில் இயக்கப்பட உள்ள இந்த ரயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் காலை 6  மணிக்குப புறப்படும் மதியம் 12.30 மணி அளவில் மதுரையை சென்றடையும். இதன் பயண நேரம் ஆறரை மணி நேரம் மட்டுமே என்றும், பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவே சென்னை வந்தடை யும் என்றும்  ரயில்வே தெரிவித்து உள்ளது.

தொடக்கத்தில் இந்த ரயில் வாரத்திற்கு ஐந்து நாட்கள் இயக்கப்படும் என்றும் நாளடைவில் தினசரி இயக்கப்படும் என்றும்  தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.